
சென்னை எண்ணூர் கடற்பகுதியில் 20 சதுர கி.மீ.,பரப்பளவில் பரவிய கச்சா எண்ணெய்
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதிலிருந்து இன்னமும் முழுமையாக சென்னை மீண்டு வரவில்லை.
இந்நிலையில் இந்த புயலின் பொழுது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியுள்ளது.
இந்த எண்ணெய் பரவல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்த்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் கடல்நீரில் கச்சா எண்ணெய் பரவிய காரணத்தினால் அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு
நிலப்பகுதியில் பரவியுள்ள கச்சா எண்ணெயினை அகற்றும் பணி நடந்து வருவதாக தகவல்
அதன்படி ஹெலிகாப்டர் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கடல்நீரில் இருந்து கச்சா எண்ணெய்யை கப்பல் கொண்டு அகற்றும் பணிகள் நடந்து வருவதாக கடலோர காவல்படை கூறியுள்ளது.
அதே சமயம், நிலப்பகுதியில் பரவியுள்ள கச்சா எண்ணெயினை அகற்றும் பணியில் மாநில அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் ஈடுப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவ கடலோர காவல்படை நிபுணர்களும் அனுப்பப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கச்சா எண்ணெய் பரவியுள்ள எண்ணூர் முதல் காசிமேடு வரையிலான பகுதிகள் மீன்படி பகுதிகள் என்பதால் இது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட ஆய்வின் பதிவு
கொற்றலை ஆற்றின் முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரையில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எண்ணெய் கசிவு காணப்பட்டுள்ளதாக @IndiaCoastGuard நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#oilspill #Ennore #cpcl #tnpcb pic.twitter.com/G2sIBI4tfC — Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) December 10, 2023