செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்
செய்தி முன்னோட்டம்
ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், வர்த்தக எண்ணெய் கப்பல் சேதமடைந்ததாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் (111 கிமீ) தொலைவில், 'ஸ்ட்ரின்டா' கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலான யுஎஸ்எஸ் மேசன் அங்கு வந்து, எண்ணெய் கப்பலுக்கு உதவியதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
கடந்த சனிக்கிழமை அன்று, இஸ்ரேலுக்கு பயணிக்கும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் எனவும், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் இஸ்ரேலுடன் தொடர்பு வைக்கக் கூடாது எனவும், ஹூதி போராளிகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2nd card
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையில் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் ஆதரவு அமைப்புகள்
இருப்பினும் ஸ்ட்ரின்டா எண்ணெய் டேங்கர் கப்பல், இஸ்ரேலுடன் தொடர்புடையதா அல்லது அந்நாட்டு துறைமுகங்களுக்கு சென்றதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஹூதி போராளிகள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளனர்.
ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகளை குறிவைத்து வரும், ஈரானுடன் ஆதரவு "எக்சிஸ் ஆப் ரெசிஸ்டன்ஸ்" அமைப்பில் உள்ள பல குழுக்களுள் ஹூதிகளும் ஒன்றாகும்.
டிசம்பர் முதல் வாரத்தில், சர்வதேச கடல் பகுதியில் 3 கப்பல்கள் ஹூதி குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.
மேலும் கடந்த மாதம் பிரிட்டிஷுக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடர்பு இருப்பதாக கூறி, ஹூதி போராளிகள் கடத்தியது குறிப்பிடத்தக்கது.