Page Loader
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்
செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இந்தியாவின் செயல்திறன்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2023
05:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது. தொடரின் தொடக்க ஆட்டக்காரர் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளது. மழை அச்சுறுத்தல் இருந்தாலும், இரண்டாவது டி20 போட்டியை விளையாடி முடிக்க முடியும் என இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளது.

India vs South Africa 2nd T20I teams performance in St George park stadium

மைதானத்தில் இந்தியாவிவின் செயல்திறன்

கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய ஆறு ஒருநாள் போட்டிகளில் ஐந்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரையில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியதோடு, மற்றொரு போட்டியை டிரா செய்துள்ளது. இதற்கிடையே, செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் இதுவரை நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது. மற்றொரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.