NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா 
    ஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா

    ஸ்ரீ ரங்கத்தில் நாளை துவங்குகிறது வைகுண்ட ஏகாதேசி திருவிழா 

    எழுதியவர் Nivetha P
    Dec 11, 2023
    08:11 pm

    செய்தி முன்னோட்டம்

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதேசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை(டிச.,12) துவங்குகிறது.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் 10 நாட்கள் பகல்பத்து என்றும், அடுத்த 10 நாட்கள் ராபத்து என்றும் கூறப்படும்.

    கடைசி நாள் இயற்பா என்றும் கூறப்படும் நிலையில் மொத்தம் 21 நாட்கள் இந்த திருவிழாநடைபெறுவது வழக்கம்.

    அதன்படி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் நடக்கவுள்ளது.

    இதனையொட்டி அன்றைய தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7,30 மணியளவில் அர்ஜுன மண்டபம் சென்றடைவார் என்று தெரிகிறது.

    திருவிழா 

    நம்பெருமாள் தொடர்ந்து 20 நாட்கள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்

    அதன் பின் அரையர்கள் பெருமாள் முன் நின்று காலை 8 மணிமுதல் 12 மணிவரை நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடுவர்.

    இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார்.

    மூலவரான ரங்கநாத பெருமாள் இந்த முதல்பத்தின் முதல் நாள் முதல் தொடர்ந்து 20 நாட்கள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    மேலும் இந்த பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஏகாதேசி 

    23ம் தேதி வைகுண்ட ஏகாதேசி திருநாள்

    இதனையடுத்து ராப்பத்து முதல் நாளான வரும் 23ம் தேதி வைகுண்ட ஏகாதேசி திருநாள்.

    அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு 4 மணிக்கு பரமபதவாசல் என்று அழைக்கப்படும் சொர்கவாசலில் ரத்தின அங்கி அணிந்து எழுந்தருள்வார்.

    இந்த சிறப்புமிக்க சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளுடன் சொர்கவாசலை கடந்து செல்வர்.

    சொர்க்கவாசல் 

    ராபத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்

    இதனை தொடர்ந்து இந்த சொர்க்கவாசல் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பகல் 1 மணிமுதல் இரவு 8 மணிவரையும், 29ம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 வரையும் திறந்திருக்கும்.

    30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    23ம் தேதி முதல் துவங்கும் ராபத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே அமைந்துள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் வெவ்வேறு அலங்காரத்தில் தினமும் எழுந்தருள்வார்.

    திருவிழா 

    நாச்சியார் திருக்கோலம் என்று கூறப்படும் மோகினி அலங்காரம் 

    தொடர்ந்து, ராபத்தின் 10ம் நாளான ஜனவரி 1ம் தேதி தீர்த்தவாரியும்,

    2ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் நடைபெறுவதோடு ஏகாதேசி திருவிழாவானது இனிதே நிறைவுறும்.

    இதற்கிடையே பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான வரும் 22ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்று கூறப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    திருவிழா

    சமீபத்திய

    வங்கதேசத் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணி
    அமெரிக்காவில் தான் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல் ஐபோன்
    பாக் என்பது பாகிஸ்தானை குறிப்பிடுகிறதா? மைசூர் பாக் பெயரை மாற்றிய ஜெய்ப்பூர் வணிகர்கள் ஜெய்ப்பூர்
    கூகிள் ஊழியர்களுக்கு இவ்வளவு சலுகைகளா? நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஐந்து சலுகைகள் கூகுள்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    திருவிழா

    உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    அக்ஷய திரிதியைக்கு நீங்கள் தங்கம் தவிர வேறு சில பொருட்களையும் வாங்கலாம்! பண்டிகை
    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! இந்தியா
    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள்  தஞ்சை பெரிய கோவில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025