#தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் பிறந்தநாள் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில், ரஜினிகாந்த் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடித்துள்ளார்.
இது தவிர, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, பஹத் பாசில் என பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இணைந்துள்ளனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் நிலையில், படம் மும்பை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'வேட்டையன்' என பெயரிடப்பட்ட தலைவர்170 திரைப்படம்
The wait is over! ⌛ Presenting the title of #Thalaivar170 🕴🏻 - VETTAIYAN 🕶️
— Lyca Productions (@LycaProductions) December 12, 2023
▶️ https://t.co/lzzKA7B0lA
Unleashing Thalaivar's power, style & swag on his special day! 💥#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/6wD1c5Zehw