NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 11, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் நிலவி வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டப்பிரிவு 370ஐ, 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது.

    அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் முடிவு சரியானது என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

    மேலும் ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

    card 2

    வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தீர்ப்பு 

    இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட பெஞ்ச், ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை எளிதாக்குவதற்கான சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக விதி என்று தீர்ப்பளித்தது.

    அதுமட்டுமின்றி 1947இல், ஜம்மு-காஷ்மீர் அரசாட்சியில் இருந்து விடுபட்டு, இந்தியாவுடன் இணைந்தபோது, அது இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. அது இந்தியாவுடன் இணைந்த தருணத்தில், அதன் அரசியலமைப்புச் சபை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

    "ஜே&கே அரசியலமைப்பு சபை என்பது நிரந்தர அமைப்பாக இருப்பதற்காக உருவாக்கப்படவில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் வரை மட்டுமே இது செயல்பாட்டில் இருப்பதாக உருவாக்கப்பட்டது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

    card 3

    எதற்காக சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கேள்வி

    உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், மேலும் "எவ்வாறாயினும், மாநிலத்திற்கு "உள் இறையாண்மை" இல்லாதபோது, இந்தியாவுடன் இணைந்த பிறகும், ஜம்மு காஷ்மீர் ஏன் சிறப்பு அந்தஸ்தை இன்னும் அனுபவித்து வருகிறது?" என கேள்வி கேட்டது.

    "அரசியல் நிர்ணய சபை இல்லாதபோது, ​​370வது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நிபந்தனையும் இல்லாமல் போனது" என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

    இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு 3 விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

    இருப்பினும் இவர்கள் அனைவரும், பிரிவு 370 ரத்து தொடர்பான விவகாரத்தில் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார்  அமித்ஷா
    தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது  காவல்துறை
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம்  திருவண்ணாமலை
    ராணுவ வீரர் மனைவி மானபங்கப்படுத்திய விவகாரம் - பகீர் ஆடியோ பதிவு வெளியீடு  திருவண்ணாமலை

    உச்ச நீதிமன்றம்

    LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்தியா
    ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் இந்தியா
    ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை

    தேர்தல்

    அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்கெடுப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பு சத்தீஸ்கர்
    நான்காவது முறையாக முதலமைச்சர் ஆவாரா ஜோரம்தங்கா? மிசோரத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு  மிசோரம்

    தேர்தல் ஆணையம்

    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தமிழ்நாடு
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025