
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்
செய்தி முன்னோட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருப்பதி கோயிலில் பின்பற்றப்படும் மாடல் க்யூ இங்கும் பின்பற்றப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அதன்படி, பக்தர்கள் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகிறார்களாம்.
எனினும் கூட்ட நெரிசலை சமாளிக்க இயலவில்லை என்று தேவசம் போர்டு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் போதிய வசதிகள் செய்துதரப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
பம்பைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும்,
வரும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கூட்டம்
பம்பையிலேயே பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருக்கவேண்டிய அவல நிலை
சன்னிதானத்தில் கூட்டத்தினை குறைக்கும் வகையில் பம்பையில் பக்தர்கள் கட்டுப்படுத்தப்படுவதால் அங்கேயே பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே குழந்தைகள் தரிசனம் மேற்கொள்ள மட்டும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
கூட்ட நெரிசல் காரணமாக பந்தளம் கோயிலில் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் பல பக்தர்கள் வீடு திரும்பும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமின்றி கேரளா பக்தர்கள் பலரும் கூட சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி செல்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் இம்முறை திரண்டு வந்ததால் நிலைமையை சமாளிக்க இயலவில்லை என்று தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.