Page Loader
யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

யு19 உலகக்கோப்பை 2024 திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2023
11:17 pm

செய்தி முன்னோட்டம்

யு19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2024 தொடர் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட போட்டி அட்டவணையை திங்கட்கிழமை (டிச.11) ஐசிசி வெளியிட்டுள்ளது. முன்னதாக, இலங்கையில் போட்டி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஐசிசி தற்காலிகமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்ததை அடுத்து போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை யு19 உலகக்கோப்பையில் 15வது சீசனை நடத்துகிறது. இந்த நிகழ்வை இலங்கையில் இருந்து இடமாற்றம் செய்ய ஐசிசி நவம்பர் மாதம் முடிவு எடுத்தது." என்று தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

யு19 கிரிக்கெட் உலகக்கோப்பை திருத்தப்பட்ட போட்டி அட்டவணை