Page Loader
மழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி!
சேதமடைந்த சான்றிதழ்களை பெற இணையதளம் அறிவிப்பு

மழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 12, 2023
08:19 am

செய்தி முன்னோட்டம்

சென்ற வாரம் பெய்த புயல் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் உடைமைகளும் நாசமடைந்தன. குறிப்பாக மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் பலவும் மழை நீரில் சேதமடைந்ததாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த சூழலில், ழையால் சேதமடைந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதள பக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. http://mycertificates.in என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்து, சேதமடைந்த சான்றிதழ்களின் நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய கட்டணம் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபற்றிய சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற டோல் ஃப்ரீ எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

உயர்கல்வி துறையின் அறிவிப்பு