
25 ஆண்டுகால கூகுள் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக உள்ளார்.
இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அவர், கூகுளின் 25 ஆண்டு கால வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், கூகுள் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், தனது 25 ஆண்டு கால வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் என அறிவித்துள்ளது.
எனினும், ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரராக உள்ளார்.
2023 google trends top 10 in sports
2023இல் விளையாட்டு தொடர்பாக அதிகம் தேடப்பட்டவைகள்
2023இல் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்பான பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகும். அதற்கடுத்த இடங்களில் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை தொடர்கள் உள்ளன.
2023இல் புதிதாக தொடங்கப்பட்ட மகளிர் ஐபிஎல் இந்த பட்டியலில் நான்காவது இடத்திலும், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுகள் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
அதற்கடுத்த இடங்களில் முறையே இந்தியன் சூப்பர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஷஸ், மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் எஸ்ஏ 20 ஆகிய விளையாட்டுகள் உள்ளன.