
தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும், அவை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை.
ஜெயம் ரவியின் அகிலன் தொடங்கி, கார்த்தியின் ஜப்பான் வரை பல படங்கள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவின.
அந்த வகையில் இந்த ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களை எஞ்சியுள்ள நிலையில், இந்த வருடம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வியடைந்த சில படங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
2nd card
ஜப்பான்
இந்த ஆண்டை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மூலம் வெற்றியுடன் துவக்கிய நடிகர் கார்த்திக்கு, தனது 25வது படமான ஜப்பான் திரைப்படம் வெற்றி அளிக்கவில்லை.
எளிய மக்களின் கதையை படமாக்குவதில் தேர்ந்தவரான இயக்குனர் ராஜு முருகன், கமர்சியல் பாணியில் சொல்லிய கதை தோல்வியையே தழுவியது.
தீபாவளிக்கு வெளியான இப்படம், உடன் வெளியான ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்துடன் போட்டி போட முடியாமல், முதல் வாரத்திலேயே திரைகள் குறைக்கப்பட்டது.
வலுவில்லாத திரைக்கதை, மனதில் நிற்காத பாடல்கள், வழக்கமான கமர்சியல் சக்கரத்தில் படம் சிக்கியது உள்ளிட்டவை, படம் தோல்வியடைய காரணமாகின.
3rd card
பத்து தல
சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம், கமர்சியல் திரைப்படமாக ரசிகர்களை மகிழ்விக்க தவறி தோல்வி அடைந்தது.
"தீயவனுக்குள் ஒரு நல்லவன் இருக்கிறான்" என்கிற வழக்கமான பாணியில், கன்னட படமான 'முப்டி' ரீமேக்காக எடுக்கப்பட்ட இப்படம், அந்த படத்தின் வெற்றியில் பாதியை கூட தொடவில்லை.
தன்னை கொல்ல நூற்றுக்கணக்கான பேர் துப்பாக்கியுடன் வந்தாலும் தனியாக சிம்பு சமாளிப்பது உள்ளிட்ட, வழக்கமான பழைய ஆக்சன் காட்சிகளும்,
ஆழமில்லாத கதாபாத்திரங்களும், விறுவிறுப்பாக நகராத திரைக்கதையும் படத்தை தோல்வி பாதைக்கு கூட்டிச் சென்றது.
4th card
சந்திரமுகி 2
நன்றாக ஓடி வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு, இரண்டாம் பாகம் எடுத்து பாழாக்குவது, தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு கைவந்த கலை.
அந்த வகையில் தான், கடந்த 2005 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, இரண்டு வருடங்கள் ஓடிய சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் பி வாசு திட்டமிட்டார்.
படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்க, கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்த இப்படம், படுதோல்வியை சந்தித்தது.
5th card
800
800, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம்.
முதலில் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த நிலையில், அவர் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, மாதூர் மிட்டல் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
வழக்கமாக, வெற்றிகளை வரும் விளையாட்டு தொடர்பான படங்களைப் போல் அல்லாமல், இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியையே தழுவியது.
6th card
கிக்
ஒரு சில படங்கள் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்படும் போது, ஏன் இப்படங்கள் இவ்வளவு பொருட்ச்செலவில் எடுக்கப்படுகிறது என திரைப்படம் பார்ப்பவர்களுக்கு கேட்க தோன்றும். அது போன்ற ஒரு படம் தான் சந்தானத்தின் கிக்
கதை, இசை, திரைக்கதை, காமெடி என அனைத்துமே, படத்தை மோசமாகியது இப்படத்தில் தான்.
கிக் திரைப்படத்தின் தோல்வி, தொடர்ந்து நடிகனாக வெற்றி பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை, சந்தானத்திற்கு கண்டிப்பாக உணர்த்தி இருக்கும்.
7th card
டக்கர்
பணக்காரன் ஆக துடிக்கும் ஹீரோவிற்கும், அதிக பணத்தால் வெறுப்படையும் ஹீரோயினுக்கிடையே நடப்பது தான் இப்படத்தின் கதை.
படத்தில், இந்த ஒன்லைனரை தவிர வேறு எதுவுமே புதிதில்லை.
கிராமத்து நபர் வேலை தேடி சென்னைக்கு வருவது, வரும் இடத்தில் அவமானப்படுவது, பணக்காரப் பெண்ணை பார்த்தவுடன் காதலிப்பது,
வில்லன், நாயகி, ஹீரோவின் நண்பர் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்து பழகிய 'பழங்கால' படங்கள் போல் இருந்ததால், இப்படம் தோல்வியை சந்தித்திருக்கலாம்.
8th card
லத்தி
தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய போலீஸ்-ரௌடி கதை. இருப்பினும், கதாநாயகன் ஆன விஷாலை பெரிய அதிகாரியாக காட்டாமல், சாதாரணமான கான்ஸ்டபிள் ஆக காட்டியது தான் படத்தில் வித்தியாசம்.
படத்தில் ஆக்சன், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை என தேவையான அனைத்தும் இருந்தாலும், படத்தில் லாஜிக் சுத்தமாக இல்லை.
காவல்துறை உடையில் இருக்கும் விஷாலை அடிக்க மாட்டேன் என, அவர் உடையை கழட்டும் வரை காத்திருக்கும் வில்லன், பாலிதீன் கவரை முகத்தில் மாற்றிக் கொண்டு சுற்றும் வில்லன் ஆகியவை சின்ன உதாரணங்கள்.
கூடவே, "அவன நாம இங்கே வரவைக்கல... அவன்தான் நம்மள இங்க வரவெச்சிருக்கான்" போன்ற க்ளிஷே வசனங்களும் படத்தை வெற்றி பெற செய்யவில்லை.
9th card
ருத்ரன்
ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் மற்றும் சரத்குமார் நடித்த இப்படம், மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
குடும்பத்தை பழி வாங்கும் வில்லனை, மீண்டும் ஹீரோ பலி வாங்கும் எம்ஜிஆர், சிவாஜி காலத்து கதையை, இந்த காலத்தில் படமாக்கி உள்ளார் இயக்குனர் கதிரேசன்.
இது ஒன்றே படம் தோல்வியடைய போதும் என்றாலும்,கர்ப்பிணியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர், நாற்காலியில் மோதி வலியில் துடிக்கும் காட்சிகளும்,
எண்பதுகளில் பொள்ளாச்சியில் சின்ன ரவுடியாக இருந்து படிப்படியாக வளர்ந்து, சென்னையை ஆட்டிப்படைக்கும் சரத்குமாரும், படம் தோல்வி அடைவதை உறுதி செய்கிறார்கள்.
10th card
கண்ணை நம்பாதே
உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஆத்மிகா ஆகியோர் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மாறன் இயக்கத்தில் நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்தை பொருத்தவரையில், 'கண்ணை மட்டுமல்ல எதையுமே நம்ப முடியாது'.
திடீரென நடக்கும் கொலை, செய்யாத கொலைகள் சிக்கிக் கொள்ளும் ஹீரோ என பழைய டெம்ப்லட்டில் கதை இருந்தாலும், படத்தை சுவாரசியமாக இயக்குனர் வழங்கியிருக்கலாம். ஆனால் தவறி விட்டார்.
படத்தில் உள்ள லாஜிக் பிழைகள், சுவாரசியம் இல்லாத ட்விஸ்ட்டுகள், திரைக்கதை முழுவதும் திடீர் திடீரென முளைத்துக் கொண்டே இருக்கும் புதிய கதாபாத்திரங்கள், படத்தை எதிர்பார்த்த வெற்றிக்கு இட்டுச்செல்லவில்லை.
11th card
இறைவன்
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், அகமது இயக்கிய இறைவன் படம், தனது பேருக்கு நேர் எதிராக எமனாக இருந்தது.
வழக்கமான சைக்கோ திரில்லர் கதைகளுக்கு இருக்கும், எந்த சுவாரசியமும் இல்லாமல் உருவான இப்படம், ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றிய படம் எனக் கூறிவிட்டு, அருவருப்பான கெட்ட வார்த்தைகள், கொடூரமான கொலைகளை படம் முழுவதும் இயக்குனர் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.
மேலும், மிகவும் வன்முறை நிறைந்த படங்களுக்கும் இயக்குனர்கள் U/A தணிக்கை சான்றிதழ் பெற முயற்சிக்கும் நிலையில், இப்படத்தின் இயக்குனர் வாண்டேடாக 'A' சான்றிதழ் பெற்றது, படத்தின் வசூலுக்கு உதவவில்லை.
12th card
அகிலன்
கல்யாண்கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில், புதுமையான கதைக்களம், பேசப்படாத அரசியல் என வெற்றி படத்தை வழங்குவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் அதை தவறவிட்டுவிட்டார்.
வழக்கமாக ஜெயம் ரவி படங்களில் பேசப்படும் சர்வதேச கார்ப்பரேட் அரசியல், இப்படத்திலும் பேசப்பட்டுள்ளது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆனது.
அதேபோல் வழக்கமான லாஜிக் பிரச்சனைகள் இப்படத்திலும் தொடர்கின்றன.
அரசு அதிகாரிகளை சாதாரணமாக கொலை செய்யும் ஜெயம் ரவி, கடத்தல் மன்னனான ஜெயம் ரவி-பிரியா பவானிசாகர் இடையேயான காதல் வெளியில் தெரியாமல் இருப்பது,
மிகப்பெரிய வில்லன் சாதாரண கிரேன் ஆபரேட்டரை நம்புவது, ஆகியவை சின்ன உதாரணங்கள்.
ஹார்பரை தனது கண்ட்ரோலில் வைத்திருந்த அகிலன், ரசிகர்கள் மனதை கண்ட்ரோலில் வைக்க தவறிவிட்டார்.