'நீர் வழிபடூஉம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் ஈரோடு மாவட்ட எழுத்தாளர்
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையினை சேர்ந்தவர் எழுத்தாளர் ராஜசேகரன் என்னும் தேவி பாரதி.
இவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.
முதலில் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த இவர், ஒரு கட்டத்திற்கு மேல் முழுநேர எழுத்தாளராக மாறியுள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை 'நீர் வழிபடூஉம்' என்னும் நாவலுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வரின் வாழ்த்து பதிவு
நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் #தேவிபாரதி அவர்களின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் #SahityaAkademi விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! pic.twitter.com/TfasdA9gzy
— M.K.Stalin (@mkstalin) December 11, 2023