
வெள்ளத்தால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் - பழுது நீக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் அண்மையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இணைப்பு சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள், மின்கலனால் இயங்கும் நாற்காலி உள்ளிட்டவை போன்ற பொருட்கள் சேதம் அடைந்திருக்கும்.
அதனை பழுது பார்த்து சரிசெய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மேற்கூறியவாறு பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்களை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பழுதுகள் சரிசெய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
உதவி எண்கள் குறித்த தகவல்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருந்தால், அதனை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.#CMMKSTALIN | #TNDIPR | @mkstalin pic.twitter.com/3Yh633QJuz
— TN DIPR (@TNDIPRNEWS) December 12, 2023