
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2024 ஜனவரி 25 அன்று தொடங்க உள்ள இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முழங்கால் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு உடல்தகுதியை மீட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும்போது அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் உட்பட, தொடரின் சிறந்த வீரர் கிறிஸ் வோக்ஸ் இடம் பெறாத நிலையில், இங்கிலாந்து அணியில் மூன்று புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
England Test Squad for 5 Test matches series against India
மூத்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைப்பு
மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் பென் ஃபோக்ஸ் 2021 இந்திய சுற்றுப்பயணத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதை கருத்தில் கொண்டு அவர் இந்திய தொடருக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் முதல்முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஆலி ராபின்சன் , ஜோ ரூட், மார்க் வூட்.