NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி
    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி

    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி

    எழுதியவர் Nivetha P
    Dec 11, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

    அப்போது, பாரீஸ் நகரத்தில் இந்திய வம்சாவளிவளியினர் முன்னிலையில் பேசிய மோடி, 'இந்தியா சார்பில் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்' என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் பார்க் பிரான்ஸ்வா என்னும் இடத்தில் தற்போது திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவரின் இந்த முழு திருவுருவ சிலையினை பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாச்சார மன்றம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து இந்த திருவுருவ சிலையினை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று(டிச.,10) திறந்து வைத்துள்ளார்.

    சிலை 

    தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி 

    இந்த திருவள்ளுவர் திருவுருவ திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதரக அதிகாரிகள், வொரெயால் தமிழ் கலாச்சார மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தினை பதிவிட்டு,

    'இந்த சிலையானது நமது கலாச்சார பிணைப்புகளுக்கான ஓர் அழகான சான்று' என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.

    மேலும், திருவள்ளுவர் அறிவு மற்றும் ஞானத்தின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதுமுள்ள ஏராளமான மக்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மோடியின் பதிவு 

    பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன. https://t.co/yaDbtXpOzb pic.twitter.com/6tHTbvxOPI

    — Narendra Modi (@narendramodi) December 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    பிரான்ஸ்
    எக்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ சந்திரயான் 3
    சொந்த வீட்டை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் வணிகம்
    2024ல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான்கள் செடான்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    பிரதமர் மோடி

    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  ரயில்கள்
    ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம் தமிழ் திரைப்படம்
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்

    எக்ஸ்

    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் ட்விட்டர்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? ட்விட்டர்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் சமூக வலைத்தளம்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025