சூப்பர் ஸ்டார் பிறந்தநாளையொட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
செய்தி முன்னோட்டம்
பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில், கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், "காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்" என்ற பாடலை படக்குழு சார்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடலில், இளமையான தோற்றத்தில், கல்லூரி மாணவனாக கவின் தோற்றமளிக்கிறார்.
இப்படத்தில் கவினுக்கு தந்தையாக மலையாள நடிகர் லால் நடிக்கும் நிலையில், அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றார்.
முதலில் இப்படத்தில், ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த நிலையில் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்டார் படத்தின் முதல் பாடலை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்
Very very happy to release the first single video from #STAR! https://t.co/8xxxajovzI
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 12, 2023
Wishing the absolute best to @elann_t and the entire team of⭐️#HAPPYBIRTHDAYSUPERSTAR
Vintage YUVAN SHANKAR RAJA musical 🎶#COLLEGESUPERSTARS @Kavin_m_0431 @thisisysr @madhankarky… pic.twitter.com/6mS677UQKl