Page Loader
பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

பிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்

எழுதியவர் Srinath r
Dec 11, 2023
03:27 pm

செய்தி முன்னோட்டம்

அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பிரபலமான பல துறைகளில் பெற்றவர்களைப் போலவே, அவர்களது வாரிசுகளும் அந்தத் துறையில் நுழைந்து சாதிக்கிறார்கள். சிவாஜி-பிரபு-விக்ரம் பிரபு, சிவகுமார்-சூர்யா, கார்த்தி ஆகியோரும் தமிழ் சினிமா அறிந்த பிரபலமான உதாரணங்கள். இருப்பினும், பெற்றோர் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தாலும், அந்த வாசமே இல்லாமல் வளரும் வாரிசுகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி பிரபலமானவர்களும், சினிமா வாசமே படாத அவர்களின் வாரிசுகள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

2nd card

ஜெய்சங்கர்-விஜய் சங்கர்

புகழ்பெற்ற பழம்பெறும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர், பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தும் அது வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, சென்னையில் புகழ்பெற்ற கண் மருத்துவராக இருந்து வருகிறார். மேலும், இவரின் மனைவியும் கண் மருத்துவர் என கூறப்படுகிறது. தலைவாசல் விஜய்- ஜெய வீணா குணச்சித்திரம், வில்லன், காமெடி என தமிழ் சினிமாவில் தலைவாசல் விஜய் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என கூறலாம். அவ்வளவு புகழ்பெற்ற தலைவாசல் விஜயின் மகளான ஜெய வீணா, நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இந்தியாவிற்காக பல தெற்காசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3rd card

மாதவன்- வேதாந்த்

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தற்போதும் படங்களில் பிசியாக உள்ள மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரராக உள்ளார். இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த நீச்சல் போட்டிகளில் ஐந்து தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை அவர் அள்ளினார். சின்னி ஜெயந்த்- ஸ்ருதன் ஜெய் தமிழ் சினிமாவில் தனது மேனலிஷத்திற்காக அறியப்பட்ட சின்னி ஜெயந்த் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். தற்போது விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

4th card

ஜெமினி கணேசன்- கமலா செல்வராஜ்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் காதல் மன்னனாக திகழ்ந்த ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சினிமா வாசம் இல்லாமல், சென்னையில் புகழ்பெற்ற மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேலும், சென்னையில் முதன் முதலாக டெஸ்ட் டியூப் பேபியை இவர்தான் அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஜெமினி கணேசனின் இரண்டாவது மகளான ஜெயா ஸ்ரீதரும் மருத்துவர் தான். செந்தில்- பிரபு தமிழ் சினிமாவில் இரண்டு தசாபங்களுக்கு மேல் கவுண்டமணி உடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் நடிகர் செந்தில். இவருடைய மகனான பிரபு, சினிமாவிற்கு வராமல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை சாலிகிராமம் பகுதியில், மருத்துவமனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.