5 நாடுகள் பங்கேற்கும் போட்டிக்காக ஸ்பெயின் சென்றன இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள்
5 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டிக்காக இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது. இந்த தொடரில் இந்தியாவுடன், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நான்கு ஐரோப்பிய அணிகள் விளையாட உள்ளன. இந்திய ஆடவர் அணி டிசம்பர் 15ஆம் தேதி ஸ்பெயினுக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து பெல்ஜியம் (டிசம்பர் 16), ஜெர்மனி (டிசம்பர் 19) மற்றும் பிரான்ஸ் (டிசம்பர் 20) ஆகியவற்றுக்கு எதிராக விளையாட உள்ளது. மகளிர் அணி டிசம்பர் 15இல் தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினையும், டிசம்பர் 16ஆம் தேதி பெல்ஜியத்தையும், டிசம்பர் 19ஆம் தேதி ஜெர்மனியையும், டிசம்பர் 21ஆம் தேதி அயர்லாந்தையும் எதிர்கொள்கிறது.
இந்திய ஆடவர் அணி
5 நாடுகள் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணிக்கு ஹர்மன்ப்ரீத் சிங் தலைமை தாங்க உள்ளார். 2023-24 ஹாக்கி புரோ லீக் சாம்பியன்ஷிப் சீசனுக்கு பயிற்சி காலமாக இது இந்திய வீரர்களுக்கு இருக்கும். ஆடவர் அணி: பிஆர் ஸ்ரீஜேஷ், கிரிஷன் பி பதக், சூரஜ் கர்கேரா, ஜர்மன்பிரீத் சிங், ஜுக்ராஜ் சிங், ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), வருண் குமார், சுமித் (துணை கேப்டன்), சஞ்சய், நிலம் சஞ்சீப் செஸ், யஷ்தீப் சிவாச், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், ரபிச்சந்திர சிங் மொய்ராங்தேம், மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், கார்த்தி செல்வம், தில்ப்ரீத் சிங், ஆகாஷ்தீப் சிங்.
இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக சவிதா செயல்பட உள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டம் ஜனவரியில் ராஞ்சியில் நடக்க உள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக இந்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மகளிர் அணி : சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, குர்ஜித் கவுர், அக்ஷதா அபாசோ தெகலே, நிஷா, வைஷ்ணவி விட்டல் பால்கே, மோனிகா, சலிமா டெட், நேஹா, நவ்நீத் கவுர், சோனிகா, ஜோதி, பல்ஜீத் கவுர், ஜோதி சாத்ரி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனா கட்டாரியா, பியூட்டி டன்டுங், ஷர்மிளா தேவி.