48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் நீண்ட தங்களின் நீண்ட நேர ஷிப்ட்க்கு பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளியில் மரணித்துள்ளனர்.
டிசம்பர் 10 ஆம் தேதி, சென்னை மருத்துவக் கல்லூரியில்(எம்எம்சி) பணிபுரியும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை பட்டதாரி மருத்துவர் மருதுபாண்டியன், அவர் இல்லத்தில் இறந்தார்.
டிசம்பர் 11, அன்று, சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சோலைசாமி, பணி முடிந்து வீடு திரும்பிய பின் உயிரிழந்தார்.
இரு மருத்துவர்களும் அதிக வேலை செய்ததாகவும், 24 மணி நேர வேலை ஷிப்டுகளில் இருந்து வீடு திரும்பிய பிறகு இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
2nd card
அரசு மருத்துவமனைகளில் ஆட்பற்றாக்குறை நிலவுவதாக குற்றச்சாட்டு
இரு மருத்துவர்களும் அதிக நேரம் வேலை செய்ததால், தீவிர மன அழுத்தத்தின் விளைவாக மாரடைப்பால் இறந்ததாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின்(DASE) செயலாளர் மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
"போதிய ஆட்கள் இல்லாத மருத்துவமனைகளின் காரணமாக மருத்துவர்கள் அதிகமாக வேலை செய்வதின் விளைவு இதுவாகும்."
"மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் போதிய ஆட்கள் இல்லாததால் தான், மருத்துவர் மருதுபாண்டியன் மருத்துவமனையில் டேட்டா ஆபரேஷன் வேலை செய்ய வைக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது" என சாந்தி கூறியுள்ளார்.
"மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு காரணமாக நாடு முழுவதும் தினமும் ஏராளமான இளம் மருத்துவர்கள் இறக்கின்றனர்" என சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான மகாராஜன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.