NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை
    ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை

    ரீவைண்ட் 2023 : கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 12, 2023
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

    இந்தாண்டின் அரசியல் திருப்பங்கள், தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள், சிறந்த படங்கள், தோல்வியுற்ற படங்கள், ஆஸ்கார் நிகழ்வுகள் என பல உள்ளது நாம் அசைபோட.

    அந்த வகையில், இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள் என்னென்ன என்பதை கூகிள் பட்டியலிட்டுள்ளது.

    அதில் முதல் இடத்தை பிடித்திருப்பது மாங்காய் ஊறுகாய் செய்முறை தான். அதனை தொடர்ந்து, பஞ்சாமிர்தம், திருவாதிரை களி, உகாதி பச்சடி மற்றும் ரவா லட்டு போன்ற பண்டிகை உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    card 2

    அதிகம் தேடப்பட்ட முதல் 10 சுற்றலா தளங்கள்

    இதே போல, இந்தியர்கள் இந்தாண்டு அதிகம் தேடிய சுற்றுலா தளம், வியட்நாம். அதனை தொடர்ந்து, கோவா, பாலி, இலங்கை, தாய்லாந்து, காஷ்மீர், கூர்க், அந்தமான் நிக்கோபார் தீவுகள், இத்தாலி மற்றும் இறுதியாக சுவிட்சர்லாந்து.

    அதேபோல, வெயில் காலத்தில் சருமத்தையும், கூந்தலையும் எப்படி பாதுகாப்பது என்பது தான், இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ள 'How to' கேள்வியாக இருந்துள்ளதாம்.

    2023ஆம் ஆண்டின் வெப்பம் மற்ற ஆண்டை விட சற்றே அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வரிசையில், அதிகமாக தேடப்பட்ட நிகழ்வுகளில், சந்திரயான் 3-யும், அதனை தொடர்ந்து, கர்நாடகா தேர்தல், இஸ்ரேல் செய்திகளும் இடம்பிடித்துள்ளது

    ட்விட்டர் அஞ்சல்

    கூகிளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவை

    2023 was a year unlike any other and we've got the trends to prove it.

    Take a look at our #YearInSearch to see what was trending in 2023https://t.co/GygJqZbST2 pic.twitter.com/H4jyAyXlNi

    — GoogleTrends (@GoogleTrends) December 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகிள் தேடல்
    அரசியல் நிகழ்வு
    தமிழகம்

    சமீபத்திய

    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி

    கூகிள் தேடல்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    மருத்துவரின் புரியாத கையெழுத்தை புரிய வைக்க இதோ வந்துவிட்டது கூகிள் லென்ஸ் பயனர் பாதுகாப்பு
    விரைவில் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வரப்போகிறது புதிய யூ ட்யூப் புதுப்பிப்பு

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    தமிழகம்

    மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்  செங்கல்பட்டு
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம்  புதுச்சேரி
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025