உடல் எடையை குறைக்க தேனில் ஊற வைத்த பூண்டு
நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க போராடி வருகின்றனர். டயட், எக்சர்சைஸ், ஸும்பா என பல வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வார்கள். ஆனால், வீட்டில் இருக்கும் ஒரு சமையல் பொருள் மூலம், நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இது உடல் எடை குறைப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் உதவுகிறது.
தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது நெஞ்செரிச்சலை தவிர்க்கிறது நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது வயிற்றுப் போக்கில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மூளை சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது காயங்கள் விரைவாக குணமாவதற்கு உதவுகிறது பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இதய நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கிறது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது சளி மற்றும் இருமலுக்கு எதிராக போராடுகிறது