பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை அதிகாலை, ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் தெஹ்சில் தரபானில் நடந்தது எனவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் பலியான பலரும் சாமானியர்கள் உடையில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அதனால் அவர்கள் ராணுவ வீரர்களா என்பதை உறுதி செய்வதை கடினமாக இருப்பதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் மேலும் 27 பேர் காயம்
இந்த தற்கொலை படை தாக்குதலில் பல உயிர்கள் பலியானது மட்டுமின்றி, 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மீட்புப் பணிகள் தொடர்வதால் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதல், தற்காலிக இராணுவ தளமாக செயல்படும் பள்ளி கட்டிடத்தில் தொடங்கியது. முதலில் வெடிகுண்டு நிரப்பபட்ட ஒரு வாகனம் வெடித்தது என்றும், அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் தீவிரவாதி ஒருவன், "பாகிஸ்தான், இந்த தாக்குதல் ஒரு போராளியின் 'தியாகத் தாக்குதலுடன்' தொடங்கியதாக" கூற, அதைத் தொடர்ந்து மற்றவர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர், என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.