NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன? 
    சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?

    சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 12, 2023
    09:49 am

    செய்தி முன்னோட்டம்

    ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தத்தஸ்தான, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது மத்திய அரசு.

    இந்த முடிவினை உச்ச நீதிமன்றத்தின் அமர்வு, திங்களன்று ஒருமனதாக உறுதி செய்தது.

    இந்த முடிவினை, இந்தியா தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், காஷ்மீர் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சூழலில், காஷ்மீரை தன்னுடன் இணைக்க வேண்டும் எனக்கூறும் பாகிஸ்தான், இந்த தீர்ப்பிற்கு என்ன கூறியுள்ளது தெரியுமா?

    இந்திய அரசின் "ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை" சர்வதேச சட்டம் அங்கீகரிக்கவில்லை என்று கூறி, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த இந்தியாவின் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு "சட்ட மதிப்பு இல்லை" என்று கூறியுள்ளது.

    card 2

    "ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலைப்பாடு காஷ்மீரிகளின் அபிலாஷைகளின்படி செய்யப்பட வேண்டும்"

    "சர்வதேச சட்டம், 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்தியா எடுத்த ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்கவில்லை. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை ஒப்புதலுக்கு எந்த சட்டப்பூர்வ மதிப்பும் இல்லை. தொடர்புடைய UN SC தீர்மானங்களுக்கு இணங்க காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது. அதை பறிக்க முடியாது" என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி தெரிவித்தார்.

    இஸ்லாமாபாத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜிலானி, காஷ்மீர் மக்கள் மற்றும் பாகிஸ்தானின் விருப்பத்திற்கு எதிராக "இந்த சர்ச்சைக்குரிய பிரதேசத்தின் நிலை குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை" என்றார்.

    "ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலைப்பாடு தொடர்புடைய ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி மற்றும் காஷ்மீரிகளின் அபிலாஷைகளின்படி செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

    card 3

    "இந்தியா தனது சர்வதேச கடமைகளில் இருந்து ஒதுங்க முடியாது"

    "ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்திய அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை, பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்பிற்கு அடிபணிந்த எந்தவொரு செயல்முறையும் எந்த சட்ட முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டு சட்டம் மற்றும் நீதித்துறை தீர்ப்புகளை காரணம் காட்டி இந்தியா தனது சர்வதேச கடமைகளில் இருந்து ஒதுங்க முடியாது," என்று அவர் கூறினார்.

    காஷ்மீர் பிரச்சனை மற்றும் பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவுகள் அடிக்கடி விரிசல் அடைந்துள்ளன.

    எவ்வாறாயினும், பாகிஸ்தான் இந்திய தூதரை வெளியேற்றியது மற்றும் வர்த்தக உறவுகளை குறைத்ததால், 370வது பிரிவை இந்தியா ரத்து செய்த பின்னர் அவர்களின் உறவுகள் மேலும் விரிசலை சந்தித்தது.

    card 4

    "காஷ்மீரிகளை சொந்த மண்ணில், அகதிகளாக மாற்றுவதே இந்தியாவின் குறிக்கோள்"

    ஆகஸ்ட் 5, 2019 முதல் இந்தியாவின் "ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்" அனைத்துமே, காஷ்மீரின் நிலப்பரப்பு மற்றும் அரசியல் அமைப்பு போன்றவற்றை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கிலானி மேலும் குற்றம் சாட்டினார்.

    "காஷ்மீரிகளை அவர்களது சொந்த நிலத்தில் அதிகாரம் இழந்த சமூகமாக மாற்றுவதே அவர்களின்(இந்தியா அரசின்) இறுதி இலக்கு என்பதால், பாகிஸ்தானுக்கு அது பெருத்த கவலையாக உள்ளது. அமைதி மற்றும் உரையாடலுக்கான சூழலை உருவாக்க இந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

    card 5

    "காஷ்மீர் மக்களின் எதிர்வினை, காசா போல அமையும்"

    "நாங்கள் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை விரைவில் கூட்டி எங்கள் எதிர்கால நடவடிக்கையை தீர்மானிப்போம்," என்று அவர் தொடர்ந்து கூறினார்.

    எனினும், இருநாட்டின் LOC விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டவே பாகிஸ்தான் விரும்புகிறது என்று கிலானி வலியுறுத்தினார்.

    காஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து கேட்டபோது, ​​காஷ்மீர் மக்கள் ஒருபோதும் இந்திய ஆட்சியை ஏற்கவில்லை என்றும்,"இறுதியில் அவர்களின் எதிர்வினை காசா மக்களைப் போலவே இருக்கும்," என்று அவர் கூறினார்.

    card 6

    மற்ற பாக்., தலைவர்கள் கூறுவது என்ன?

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், "ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிரான முடிவை அளித்ததன் மூலம் இந்திய உச்சநீதிமன்றம், சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. மில்லியன் கணக்கான காஷ்மீரிகளின் தியாகத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் துரோகம் இழைத்துவிட்டது" என்று கூறினார்.

    நவாஸ் ஷெரீப்பின் தலைமையில், பிஎம்எல்-என் அனைத்து மட்டங்களிலும் காஷ்மீரிகளின் உரிமைக்காக குரல் எழுப்பும் என்றும் அவர் கூறினார்.பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், "சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா தீர்மானங்களை இந்தியா பின்பற்றுவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை இந்திய நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் மாற்றி எழுத முடியாது" என கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    உச்ச நீதிமன்றம்

    கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு  அறிவியல்
    சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா? இந்தியா
    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டெல்லி
    தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர் தபால்துறை

    பாகிஸ்தான்

    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம் அமெரிக்கா
    உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு ஒருநாள் உலகக்கோப்பை
    PAKvsSL: உலகக்கோப்பைத் தொடரில் இரண்டாவது போட்டியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்! ஒருநாள் உலகக்கோப்பை
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  ஐநா சபை

    ஜம்மு காஷ்மீர்

    5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது  இந்தியா
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை  திருவண்ணாமலை
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025