10 Aug 2023

முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்; வைரலாகும் புகைப்படம்

ஆசிய கோப்பை 2023 நிகழ்வின் போது முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற உள்ளது.

மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது .

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை

எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றி வருகிறார்.

'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு

யுவராஜ் சிங் ஓய்விற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான நான்காவது இடத்தில் விளையாட சரியான பேட்டர் யாரும் அமையவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார்.

இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்; ப்ரித்வி ஷா சாதனை

ப்ரித்வி ஷா இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் அணிகளுக்கான ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்திய ஹாக்கி சப் ஜூனியர் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

இந்திய ஹாக்கி அணியின் சப்-ஜூனியர் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சர்தார் சிங் மற்றும் சப்-ஜூனியர் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டிற்கு வருகிறதா ஃபியட்?

ஜீப் மற்றும் சிட்ரன் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனமானது, முன்பு இந்தியாவில் செயல்பாடுகளைக் கொண்டிருந்த தங்களது மற்றொரு நிறுவனமான ஃபியட்டினை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்காவில் அதிகரிக்கும் EG.5 கொரோனா தொற்று; இரண்டே வாரத்தில் 12 சதவீதம் உயர்வு

பிரிட்டன் முழுவதும் வேகமாக பரவி வந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, 'எரிஸ்' எனும் EG.5, தற்போது அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுபிஐ சேவை மேம்படுத்தவிருக்கும் RBI

ஆகஸ்ட்-8 முதல் நடைபெற்று வந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த்தாஸ். அந்த அறிவிப்பில், இந்தியாவில் யுபிஐ சேவை சந்திக்கவிருக்கும் மாற்றங்களைக் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்திய காயத்ரி ரகுராம் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக இருந்தவர் ரகுராம் மாஸ்டர். கமல் ஹாசன், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் என பலருக்கு நடனம் பயிற்று வைத்தவர்.

புதிய தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோத்ரெஜ்

தமிழகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் இணைந்து கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ்.

மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியருக்கான ஐந்து விடுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) திறந்து வைத்தார்.

புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

புதிய ரூமியான் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவிற்கான ரூமியானை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா.

மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்த மற்றொரு கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் 

மணிப்பூர் வன்முறையின் போது ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்த காணொளிப் பதிவு ஒன்று வெளியாகி, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு

மகாராஷ்டிரா ஆளும் கட்சிகளில் ஒன்றான சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே மற்றும் பலர் மீது, தொழிலதிபரை கடத்திய குற்றச்சாட்டில், மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் 3-வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இன்று மக்களவை தொடங்கிய பின்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா?

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா

சீனாவில் தொழில்நுட்பத்துறையில் அமெரிக்க நிறுவனங்களின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகளைத் தடை செய்யும் வகையிலான செயலாக்க ஆணை ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் நேற்று (ஆகஸ்ட் 9) அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி

சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை

ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களில் பந்தயம் வைக்கப்படும் பொருள் அல்லது பணத்தின் முகமதிப்பின் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர்  திறந்து வைத்தார் 

தி.மு.க-வின் காலஞ்சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் நினைவாக, DPI வளாகத்தினை, 'பேராசிரியர் அன்பழகன் வளாகம்' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மூன்றாவது முறையாக 6.5 சதவிகிதம் ரெப்போ ரேட்: மாற்றம் செய்யாத நிதிக் கொள்கைக் குழு

இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டமானது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தற்போது அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.

ஜெயிலர் திரைப்படம் வெளியீடு, கொண்டாட்டத்தில் தமிழகம்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமானது இன்று வெளியாகியிருக்கிறது. ஜாக்கி ஷெராஃப், பிரியங்கா மோகன், தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

தற்போதைய பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைய மூன்றே நாட்களே இருந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.

அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

தற்போது அலுவலகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் கூகுள் மீட் மற்றும் ஸூம் ஆகிய சேவைகளுடன் போட்டியிடும் வகையில், வாட்ஸ்அப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா.

வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.

09 Aug 2023

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல் 

பிரதமரின் ஜன் யோஜனா திட்டம் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு திட்டங்களில் மட்டுமே, எவ்வித வைப்புத்தொகையினையும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்.

'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று 2-வது நாளாக மக்களவையில் நடைபெற்றது.

மோஷன் போஸ்டரினை வெளியிட்ட 'ஜென்டில்மேன் 2' படக்குழு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் 'ஜென்டில்மேன்'.

விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடிக்கும் 'குஷி' படத்தின் ட்ரைலர் 

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்துள்ள படம் 'குஷி'.

50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இந்தியர்கள், அமெரிக்க EB-1 விசா பெறுவதில் புதிய சிக்கல்

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்பானது ஆகஸ்ட் மாத விசா அறிக்கைத் தாளை வெளியிட்டிருக்கிறது. அதில் EB-1 விசா பெறுபவர்களுக்கான கடைசி நடவடிக்கை நாளை 10 ஆண்டுகள் பின்தள்ளியிருக்கிறது.

யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது

இயக்குனர் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், அமிதாஷ் பிரதான், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'பரம்பொருள்'.

செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளார்.

"மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை, 12 மணியளவில் ராகுல் காந்தி மக்களவைக்கு வந்தார்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படத்தில் பதிவான 'கேள்விக்குறி' போன்ற அமைப்பு

விண்வெளியில் புதிதாக உருவாகி வரும் இரண்டு நட்சத்திரங்களை படம்பிடிக்கும் போது, 'கேள்விக்குறி' வடிவிலான அமைப்பு ஒன்றும் அதில் பதிவாகி விஞ்ஞானிகளிடம் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜிமெயில் செயலியில் மொழிப்பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் இதுவரை வலைத்தள வெர்ஷன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த மொழிப்பெயர்ப்பு வசதியை, தற்போது ஜிமெயில் மொபைல் செயலியிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.

ஃபூட் டெலிவரி ஆப்களை எப்போதும் சார்ந்து இருப்பது தோன்றுகிறதா? உங்களுக்கு உதவ சில டிப்ஸ்

இப்போதெல்லாம், சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தாலோ, முடியவில்லை என்றாலோ உடனே உணவை ஆர்டர் செய்வது வழக்கமாகி விட்டது.

'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி

டெல்லி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று(ஆகஸ்ட்.,8) மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார்.

இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி

இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவரின் புதிய எலெக்ட்ரிக் வாகனத் திட்டம்

அடுத்த ஏழு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்கான புதிய இலக்குகளை நிர்ணயித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்டு ரோவர்.

இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC 

இந்தியாவில் தங்களது இரண்டாம் தலைமுறை GLC மாடலை, இரண்டு வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும், டீசல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்.

'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி

டெல்லியில் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிய மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் காரணமாக தொடர்ந்து அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிய வண்ணம் இருந்து வருகிறது.

ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை 

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ராகுல்-காந்தியின் "தகாத நடத்தைக்கு" எதிராக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ரகுவரன் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் - சகோதரர் உருக்கம் 

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமா உலகில் ஓர் முக்கிய வில்லனாக கருதப்பட்டவர்.

அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்?

அதானி குழும வணிக நிறுவனங்களுள் ஒன்றான அதானி வில்மரின் 44% பங்குகளை சில மாதங்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை அக்குழுமம் ஆய்வு செய்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

கேரளா மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதத்திலும் நிறை புத்தரிசி என்னும் பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

இந்தோனேசியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி போட்டிக்கான தேர்வில் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்திய பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொண்ட X

X (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் விளம்பர வருவாய் பகிர்வுத் திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு பயனரின் மறுமொழியில் காட்டப்படும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கு வருவாயின் ஒரு பகுதியை அந்தப் பயனருடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப்

வீடியோ கால்களில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை முன்னதாக சோதனை செய்து வந்தது வாட்ஸ்அப். அந்த வசதியை அடுத்து வரும் நாட்களில் பயனர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி 

தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சி, 155 வார்டுகளை கொண்டு 10 மண்டலங்களாக செயல்பட்டது.

'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு 

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என செய்திகள் வெளியாகின.

கேரளா மாநில பெயரினை மாற்ற முதல்வர் பினராயி விஜயன் முடிவு

கேரளா என்னும் பெயரினை மாற்றியமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

புதிய கேமிங் தொடர்பான செயலியை வெளியிட்டிருக்கும் நெட்ஃபிலிக்ஸ்

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களது தொலைக்காட்சிப் பெட்டியிலும் கேம்களை விளையாட உதவும் வகையில் 'நெட்ஃபிலிக்ஸ் கேம் கண்ட்ரோலர்' என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

நியூயார்க் நகரில் தனக்கு சொந்தமான காண்டோவை விற்பனை செய்திருக்கும் முகேஷ் அம்பானி

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனக்கு சொந்தமான காண்டோ ஒன்றை விற்பனை செய்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர் 

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி, ஆகஸ்ட்.,3ம்தேதி துவங்கி சென்னை எழும்பூரிலுள்ள, மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 12ம் தேதி வரை நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியானது.

4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, தான் கமிட் ஆகும் படத்தின் வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு, ஒரு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது வழக்கம்.

2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), எவ்வளவு வருமான வரி செலுத்தியது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்

மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு 

முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்கும் மத்திய அரசு திட்டமான தேசிய சமூக உதவித் திட்டத்தை(NSAP) செயல்படுத்தும் போது தவறுதலாக உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 9

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ 

மகாராஷ்டிரா மாநிலம், துஹ்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவிலில், நேற்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு 

இந்தியா: சில முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் இருப்பு குறைந்து வருவதால், தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"எத்தனை குளறுபடிகள் ஏற்பட்டாலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும்"- இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மற்றொரு முக்கியமான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது இஸ்ரோ. 2019-ல் தோல்வியடைந்த சந்திரயான்-2 திட்டத்திற்கு மாற்றாக செயல்படுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் முனைப்பில் இருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்

மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக் என்று அழைக்கப்படும் சித்திக் இஸ்மாயில்.

3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது 20-ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது.