NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா
    புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

    புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 10, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    புதிய ரூமியான் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவிற்கான ரூமியானை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா.

    மாருதி சுஸூகி எர்டிகாவை ரீபேட்ஜ் செய்து ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்து வந்தது டொயோட்டா. தற்போது அதனை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்களிடையேயான 4-வது ரீபேட்ஜ்டு மாடலாகும்.

    இந்தியாவில் இன்னோவா கிரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ் மற்றும் வெல்ஃபையர் ஆகிய ப்ரீமியம் எம்பிவிக்களை டொயோட்டா விற்பனை செய்து வரும் நிலையில், இந்த ரூமியானை தொடக்கநிலை எம்பிவியாக விற்பனை செய்யவிருக்கிறது டொயோட்டா.

    கிளான்ஸாவைப் போல இந்த ரூமியானையும், தங்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து டொயோட்டாவுக்கு வழங்கவிருக்கிறது மாருதி சுஸூகி நிறுவனம்.

    டொயோட்டா

    டொயோட்டா ரூமியான்: என்ன எதிர்பார்க்கலாம்? 

    எர்டிகாவின் ஸ்டைலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டு ரூமியானாக விற்பனை செய்யவிருக்கிறது டொயோட்டா. அந்நிறுவனத்தின் பிற எம்பிவிக்களில் இருக்கும் டிசைன்களை ரூமியானிலும் எதிர்பார்க்கலாம்.

    எர்டிகாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும், 103hp பவர் மற்றும் 137Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே ரூமியானிலும் கொடுக்கப்படவிருக்கிறது. இந்த இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படவிருக்கின்றன.

    மேற்கூறிய பெட்ரோல் இன்ஜினுடன், ரூமியானின் CNG கிட்டைக் கொண்ட மாடல் ஒன்றையும் விற்பனை செய்யவிருக்கிறது டொயோட்டா. இந்த மாடலானது CNG மோடில் 88hp பவரையும், 121.5Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது டொயோட்டா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    கார்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    மாருதி

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! வாகனம்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்

    கார்

    உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்? மஹிந்திரா
    கார் திருட்டைத் தடுக்க என்ன செய்யலாம்? ஆட்டோ
    டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்! ரோல்ஸ் ராய்ஸ்
    மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்? மாருதி

    ஆட்டோமொபைல்

    ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1 அட்வென்சர் பைக்
    ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 2 அட்வென்சர் பைக்
    எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசின் புதிய திட்டம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    'அப்பாச்சி RTX' என்ற புதிய பெயரை டிரேட்மார்க் செய்த டிவிஎஸ் நிறுவனம் பைக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025