NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI
    அடுத்த செய்திக் கட்டுரை
    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI
    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI

    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 09, 2023
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), எவ்வளவு வருமான வரி செலுத்தியது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

    மாநிலங்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய துணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்திருக்கிறார். அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிசிசிஐ எவ்வளவு வருமான வரி செலுத்தியது என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவித்திருக்கிறார்.

    அதன்படி 2021-22 நிதியாண்டில், ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறது பிசிசிஐ. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 37% அதிகமாகும்.

    பிசிசிஐ

    கடந்த ஐந்து ஆண்டுகளில் பிசிசிஐ செலுத்திய வருமான வரி எவ்வளவு? 

    2020-21 நிதியாண்டில் ரூ.844.92 கோடிய வருமான வரியும், 2019-20 நிதியாண்டில் ரூ.882.29 கோடி வருமான வரியும், பிசிசிஐ செலுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பங்கஜ் சௌத்ரி.

    அதேபோல், 2018-19 நிதியாண்டில் 815.08 கோடியும், 2017-18 நிதியாண்டில் 596.63 கோடியும் பிசிசிஐ வருமான வரியாக செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2021-22 நிதியாண்டில் ரூ.7,606 கோடி வருவாயைப் பதிவு செய்திருக்கும் பிசிசிஐ, ரூ.3,064 கோடி செலவாகியிருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது.

    அதேபோல், 2020-21 நிதியாண்டில் ரூ.4,735 கோடி வருவாயைப் பதிவு செய்திருந்த இந்திய கிரிக்கெட் வாரியம், ரூ.3,080 கோடி செலவு செய்யப்பட்டதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    கிரிக்கெட்
    வணிகம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பிசிசிஐ

    ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்! ரோஹித் ஷர்மா
    இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்! இந்திய அணி
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! ஆசிய கோப்பை
    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    கண்டனத்தை ஈர்க்கும் ICC உலகக்கோப்பை போஸ்டர் உலக கோப்பை
    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா  இந்திய கிரிக்கெட் அணி
    மேற்கிந்தியத் தீவுகளின் ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணி
    ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் ஒருநாள் உலகக்கோப்பை

    வணிகம்

    ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை கைப்பற்றிய டிமார்ட் வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 22 தங்கம் வெள்ளி விலை
    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது ரூ.35 கோடி அபராதம் விதித்த TRAI அமைப்பு டிராய்
    ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025