இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதன் மூலம், இந்தியா நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதோடு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 11 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 9வது வெற்றி இதுவாகும். அரையிறுதியில், இந்தியா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்-9) ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது. இதற்கிடையே, ஹாக்கி போட்டி தொடங்கும் முன், ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி மைதானத்தை ஒளிரச் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.