Page Loader
கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 
புள்ளிவிவரங்களுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது உரையை தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நேற்று எதிர்க்கட்சிகள் சார்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய நிலையில், அவரின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். இன்று, மத்திய அரசு சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். புள்ளிவிவரங்களுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது உரையை தொடங்கிய அவர், உலகளவில், இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆட்சியின் போது, வெறும் வார்த்தைகளாக இருந்த வாக்குறுதிகளை, தங்கள் ஆட்சி (மோடி அரசு) செயல்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

card 2

கூடுதல் படுக்கை வசதியுடன் உருவாகும் மதுரை AIIMS

தொடர்ந்து, நேற்று திமுக MP கனிமொழி பேசியதற்கு பதிலளித்த நிதியமைச்சர்,"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம்" எனக்கூறினார். "எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது. மற்ற மாநிலங்களைவிட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது" எனக்குறிப்பிட்டார். ஜப்பான் நிறுவனத்திடம் கடன் பெற்று, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டித் தரப்படும் எனவும் அவர் கூறினார்