Page Loader
சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள்
சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள்

சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்த விமானக் கட்டணங்கள்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 10, 2023
04:27 pm

செய்தி முன்னோட்டம்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. சனி, ஞாயிறு வார விடுமுறையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சுதந்திரம் தினம் வருகிறது. இதனால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையாகக் கணக்கிட்டு பலரும், சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தளங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் முக்கிய நகரங்களில் இருந்து ஆன்மிகத் தளங்களுக்கான விமான டிக்கெட்டுகள் உயர்ந்திருக்கின்றன. மேலும், சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமான டிக்கெட்டுகளின் விலையும் அதிகரித்திருக்கிறது. விமானக் கட்டணம் அதிகளவில் உயர்ந்திருக்கும் நிலையிலும், பயணம் செய்வதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனவும் பலர் தெரிவித்திருக்கின்றனர். விடுமுறை தொடங்க ஒரு நாளே இருப்பதாலும், விமானக் கட்டணங்களின் விலைகள் உயர்ந்திருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்தியா

இந்தியாவில் அதிகரித்த விமானக் கட்டணம்: 

தொடர் விடுமுறையைத் தவிர்த்து தற்போது சாதாரண நாட்களிலேயே இந்தியாவில் விமானக் கட்டணம் அதிகமாகவே இருக்கிறது. இது குறித்த அறிக்கை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச விமான நிலைய மன்றம் வெளியிட்டிருந்தது. கொரோனா காலத்திற்கு பின்பு, ஆசியா பசிபிக் நாடுகளில் விமானக் கட்டணங்கள் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசியா பசிபிக் நாடுகளிலேயே இந்தியாவிலேயே அதிகபட்சமாக 41% வரை விமான கட்டணங்கள் உயர்வைச் சந்தித்திருப்பதாகக் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து. கொரோனா காலத்திற்குப் பின்பு அதிகரித்த விமான பயணங்களுக்கான தேவையும், குறைவான விமான சேவையுமே இந்த கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.