இந்திய பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொண்ட X
செய்தி முன்னோட்டம்
X (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் விளம்பர வருவாய் பகிர்வுத் திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு பயனரின் மறுமொழியில் காட்டப்படும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கு வருவாயின் ஒரு பகுதியை அந்தப் பயனருடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக அமெரிக்க X பயனர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வருவாய் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்திருக்கிறது X.
இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு X பயனர்ளுக்கு, இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவு தொகையைப் பெற்றிருக்கின்றனர். தங்களுடன் விளம்பர வருவாயை X நிறுவனம் பகிர்ந்து கொண்ட பிறகு, அதுகுறித்த ஸ்கிரீன்ஷாட்களையும் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.
X
பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் X:
இந்தியப் பயனர் ஒருவருக்கு ரூ.13,527 வருவாய்ப் பகிர்வாக அளிக்கப்பட்டிருப்பாதகக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறது X. அந்தப் பயனர் அதுகுறித்த ஸ்கிரீன்ஷாட்டை X தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதேபோல், மற்றொரு பயனருக்கு X தளமானது ரூ.2 லட்சத்தை விளம்பர வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கிறது. X தளத்திற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்படும் நிறுவனங்களுடன் போட்டியிடவும், X-ன் வருவாயைப் பெருக்கவும் வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.
X தளத்தின் விளம்பர வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தில் இணைய வேண்டுமென்றால், பயனர்களின் அத்தளத்தின் கட்டண சேவைக்கு சந்தா செய்திருக்க வேண்டும், கடந்த மூன்று மாதங்களில் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும், என விதிமுறைகளை விதித்திருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
X பயனரின் பதிவு:
Blue tick ke paise vasool pic.twitter.com/pVrX5hTYWo
— Gabbar (@GabbbarSingh) August 8, 2023