ஜிமெயில் செயலியில் மொழிப்பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்
கூகுள் நிறுவனம் இதுவரை வலைத்தள வெர்ஷன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த மொழிப்பெயர்ப்பு வசதியை, தற்போது ஜிமெயில் மொபைல் செயலியிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது. நமது சாதனத்தின் இயல்புநிலை மொழியைக் கடந்து பிற மொழிகளை கணடறிந்தால், அதனை 'மொழிப்பெயர்ப்பு செய்யவா?' எனக் கேட்டு பாப்-அப் பேனர் ஒன்று தோன்றுகிறது. அதனைக் கிளிக் செய்வதன் மூலம் மொழிப்பெயர்ப்பை மேற்கொள்ள முடிகிறது. அதில் குறிப்பிட்ட மொழியை மட்டும் எப்போதும் மொழிப்பெயர்ப்பு செய்யும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட மொழியை மொழிப்பெயர்ப்பு செய்யாமல் இருக்கும் வகையிலோ அமைப்புகளில் நாம் மாற்றம் செய்து கொள்ளலாம். தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் இந்த வசதியை வெளியிடவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.