இந்திய ஹாக்கி சப் ஜூனியர் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்
செய்தி முன்னோட்டம்
இந்திய ஹாக்கி அணியின் சப்-ஜூனியர் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சர்தார் சிங் மற்றும் சப்-ஜூனியர் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நூறாவது நிர்வாகக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் திலீப் டிர்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் போலா நாத் சிங் மற்றும் பொருளாளர் சேகர் மனோகரன் உள்ளிட்டு இந்திய ஹாக்கியின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
இதில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோ தயப் இக்ராம் மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பியூமியோ ஆகுரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
சப் ஜூனியர் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள்
Hockey India announces Sardar Singh as the Chief Coach of the Sub-junior boys team and Rani Rampal as the Chief Coach of Sub-junior girls team. pic.twitter.com/fFuec4VPmG
— ANI (@ANI) August 10, 2023