4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, தான் கமிட் ஆகும் படத்தின் வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு, ஒரு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது வழக்கம். ஆனால், கடந்த 4 வருடங்களாக, கொரோனா, உடல்நிலை பாதிப்பு, அரசியல் பிரவேசம் குறித்த முடிவுகள் என பல சிக்கலில் இருந்ததால், ரஜினியால் இமயமலைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், அவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், 'ஜெயிலர்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, படத்தின் ஸ்பெஷல் காட்சியை நேற்று ரஜினி கண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, இன்று காலை அவர் இமயமலைக்கு கிளம்பிச்சென்றார்.