
இந்தியர்கள், அமெரிக்க EB-1 விசா பெறுவதில் புதிய சிக்கல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்பானது ஆகஸ்ட் மாத விசா அறிக்கைத் தாளை வெளியிட்டிருக்கிறது. அதில் EB-1 விசா பெறுபவர்களுக்கான கடைசி நடவடிக்கை நாளை 10 ஆண்டுகள் பின்தள்ளியிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த முடிவு, இந்தியாவில் EB-1 விசாவுக்குக் காத்திருக்கும் அதி திறன் கொண்ட பணியாளர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
INA 202(e) இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட EB-1 விசா ஒதுக்கீட்டை விட அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிற நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத இடங்களையும் இந்தியர்களுக்கு வழங்கி வந்ததாகவும், தற்போது அந்த நாடுகளில் இருந்து அதிகளவில் EB-1 விசாவுக்கான விண்ணப்பங்கள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா
EB-1 குடியுரிமை:
இதனால் இதுவரை மேற்கூறியது போல வழங்கப்பட்டு வந்த விசாக்களை, இனி INA 202(a)(5)-ன் கீழ் வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாவைப் போல, EB-1 குடியுரிமைப் பிரிவிலும், கடைசி நடவடிக்கைத் நாளானது 10 ஆண்டுகள் பின்தள்ளி ஜனவரி 2012-க்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
நடப்பு நிதியாண்டில், EB-1 விசாவுக்கான தேவை மற்றும் அளவைப் பொறுத்து, அது அக்டோபர் 2012-க்கு முன்னேற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும், நமது குடியுரிமை விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த அறிக்கைத் தாளை அந்நாட்டு State Department வெளியிடுவது வழக்கம். அதன்படி ஆகஸ்ட் மாத அறிக்கைத் தாளில் மேற்கூறிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.