செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளார். 3வது நாளாக இன்று(ஆகஸ்ட்.,9) விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கப்பட்ட விசாரணையில் முன்னதாக கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே கரூர்-சேலம் இடையேயான புறநகர் வழிச்சாலையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8க்கும் மேற்பட்டோர் 2 கார்களில் சென்று சோதனை செய்துள்ளனர். அதன்பின், அசோக்குமாரின் மனைவி நிர்மலா கட்டும் பங்களா வீட்டின் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கட்டப்படும் பங்களா வீட்டிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மனை ஒட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.