NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது

    எழுதியவர் Nivetha P
    Aug 09, 2023
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதத்திலும் நிறை புத்தரிசி என்னும் பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.

    இந்த பூஜை நாட்டில் வறட்சி நீங்கி, வளம் செழிப்பதற்காக நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

    அதன்படி இந்தாண்டிற்கான புத்தரிசி பூஜை நாளை(ஆகஸ்ட்.,10) நடக்கவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று(ஆகஸ்ட்.,9) மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளது.

    அதனை தொடர்ந்து இந்த பூஜையினை நடத்த தேவையான பட்டு வஸ்திரம் சூட்டப்பட்ட 51 நெற்கதிர் கட்டுகள், அலங்கரிக்கப்பட்ட ஆபரணப்பெட்டி ஆகியன வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக அச்சன் கோயிலில் இருந்து எடுத்துவரவுள்ளனர்.

    பூஜை 

    நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும் 

    இவ்வாறு ஊர்வலமாக கொண்டுவரப்படும் நெற்கதிர்கள் இன்று மாலை 3 மணிக்கு பம்பை கணபதி கோயிலில் வைத்து பூஜை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    அதன் பின், விரதம் மேற்கொண்ட 51 பக்தர்கள் இந்த 51 நெற்கதிர்களை சுமந்துக்கொண்டு சன்னிதானம் வரை எடுத்துச்சென்று ஒப்படைப்பர்.

    அதை அனைத்தையும் தேவசம்போர்டு அதிகாரிகள் பஞ்ச வாத்தியங்கள் முழங்குகையில் பெற்றுக்கொள்வர் என்று தெரிகிறது.

    நாளை காலை 5.45 மணிக்கு துவங்கும் இந்த புத்தரிசி பூஜை நிறைவடைந்த பின்னர், பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த பூஜை காரணமாக நாளை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    ஆடி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    கேரளா

    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  வந்தே பாரத்
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை
    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு இந்தியா
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி  இந்தியா

    ஆடி

    ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?  ட்ரெண்டிங் வீடியோ
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது  கேரளா
    ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை ராமநாதபுரம்
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025