Page Loader
மோஷன் போஸ்டரினை வெளியிட்ட 'ஜென்டில்மேன் 2' படக்குழு
மோஷன் போஸ்டரினை வெளியிட்ட 'ஜென்டில்மேன் 2' படக்குழு

மோஷன் போஸ்டரினை வெளியிட்ட 'ஜென்டில்மேன் 2' படக்குழு

எழுதியவர் Nivetha P
Aug 09, 2023
07:29 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தினை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இதனிடையே இவர் அண்மையில் இப்படத்தின் இரண்டாம் எடுக்கப்படுவதாக கூறி அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி இப்படத்தின் 2ம் பாகத்தினை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார், அண்மையில் ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி இசையமைக்கிறார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு, நயன்தாரா சக்கரவர்த்தி இதில் நடிக்கவுள்ளனர். முதல் பாகத்தினை விட இப்படத்தினை குஞ்சுமோன் மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டு வருகிறாராம். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மோஷன் போஸ்டர்