
தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியா: சில முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் இருப்பு குறைந்து வருவதால், தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வருடமும் இந்த சீசனில் தான் வெங்காயத்தின் விளைச்சலும் விநியோகமும் குறைவாக இருக்கும். அதனால், விரைவில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி வெங்காய விலை உயர்ந்தால், அது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை கடுமையாக பாதிக்கும்.
ஏற்கனவே பெரும்பாலான நகரங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 200 ரூபாயை தாண்டியுள்ளது.
ஆனால், பிற காய்கறிகளை போல் அல்லாமல், வெங்காயத்தின் விலையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் தகுந்த முயற்சி எடுத்து வருகிறது.
திஜுவ்
சேமித்து வைக்கப்பட்ட வெங்காயத்திற்கு நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது
அரசாங்கம் கிட்டத்தட்ட 250,000 டன் வெங்காயத்தை எப்போதும் இருப்பில் வைத்து பராமரித்து வருகிறது.
ஒருவேளை, சந்தைகளில் வெங்காய விநியோகம் குறைந்து, விலை உயர ஆரம்பித்தால், அரசாங்கத்திடம் இருக்கும் 250,000 டன் வெங்காயம் வெளியிடப்படும்.
எனினும், இந்திய உணவுகளில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெங்காயம் என்பதால், அதன் விலை ஏற்றமும் இறக்கமுமாக தான் இருக்கும்.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களில் பெய்த கனமழையால், சேமித்து வைக்கப்பட்ட வெங்காயத்திற்கு நிறைய சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் கவலை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், "வெங்காயத்தின் தேவை மற்றும் விநியோகத்தை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. சந்தையில் விநியோகம் குறையும் போது அதற்கு தேவையான இருப்புகள் எங்களிடம் உள்ளன." என்று அரசாங்கம் கூறியுள்ளது.