சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ
கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட்-5ம் தேதி நிலவைச் சுற்றிய சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது சந்திரான்-3 விண்கலம். இந்நிலையில், பூமியில் இருந்து சந்திரயான்-3 ஏவப்பட்ட பிறகும், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த பிறகும் அந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் லேண்டர் எடுத்த புகைப்படங்களை X தளத்தில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. பூமியில் இருந்து ஏவப்பட்ட பிறகு லேண்டர் இமேஜ் கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தையும், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த பிறகு லேண்டர் ஹரிசான்டல் வெலாசிட்டி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.