திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்திய காயத்ரி ரகுராம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக இருந்தவர் ரகுராம் மாஸ்டர். கமல் ஹாசன், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் என பலருக்கு நடனம் பயிற்று வைத்தவர்.
இவர் ஆட்டுவிக்காத நடிகர்-நடிகைகளே திரையுலகில் இல்லை எனலாம்.
அதுமட்டுமின்றி, ரவிக்குமார் இயக்கத்தில், கமல் 10 வேடத்தில் கலக்கிய 'தசாவதாரம்' படத்தில் ஒரு சிறிய காட்சியிலும் நடித்திருப்பார், அவர். இவரின் மகள் காயத்ரி ரகுராம்.
இவரும் ஒரு நடிகை மற்றும் நடன இயக்குனர் ஆவார். சார்லி சாப்ளின், விசில் போன்ற படங்களில் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு திரையுலகலிருந்து ஒதுங்கி இருந்தார்.
திருமண முறிவிற்கு பிறகு, நடன இயக்குனராக மீண்டும் திரைத்துறையில் நுழைந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
card 2
அரசியலில் இணைத்து கொண்ட காயத்ரி ரகுராம்
பின்னர் பா.ஜ.க-வில் தன்னை இணைத்து கொண்டவர், தமிழ் மாநில பா.ஜ.க தலைவரான அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலினால், கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி வந்த காயத்ரி, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவு இட்டிருந்தார். மொட்டை தலையுடனும், மயிலிறகுடனும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருந்தார்.
இது குறித்து,"இது 10 ஆண்டு கால வேண்டுதல். என் வேண்டுதலை திருப்பதி ஏழுமலையான் நிறைவேற்றி தந்துள்ளார். அதற்காக என் முடியை காணிக்கை செலுத்தி விட்டேன். வேண்டுதலை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. தரிசனமும் நல்லபடியாக நடந்தது" என்றார்.
அந்த வேண்டுதல் என்னெவென்று கேட்டபோது, "சொந்த காரணங்களுக்கான வேண்டுதல். கொஞ்சம் பர்சனல்" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன