ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்
செய்தி முன்னோட்டம்
7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி, ஆகஸ்ட்.,3ம்தேதி துவங்கி சென்னை எழும்பூரிலுள்ள, மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 12ம் தேதி வரை நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியானது.
அதன்படி இதில் பங்கேற்கும் 6 அணிகளுமே, தலா ஒருமுறை தங்களுக்குள் மோதி கொள்ளவேண்டும்.
பின்னர் இந்த லீக் மேட்ச் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு அணியும், தலா 4 மேட்ச்களில், நேற்று முன்தினம் வரை விளையாடியுள்ளனர்.
அதில், சீன அணி, 1 புள்ளி எடுத்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்தியா 10 புள்ளிகள், மலேசியா 9 புள்ளிகள் பெற்று அரையிறுதி போட்டிக்குள் நுழைந்து விட்டனர்.
போட்டி
முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணியினர் நேரடியாக மோதுகிறது
இதனை தொடர்ந்து, மீதமுள்ள 2 இடங்களை பிடிக்க பாகிஸ்தான்(5), ஜப்பான்(2), தென்கொரியா(5) உள்ளிட்ட அணிகள் போட்டி போடவுள்ளனர்.
இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட்.,8) ஒருநாள் ஓய்வு எடுக்கப்பட்ட நிலையில், இன்று(ஆகஸ்ட்.,9) லீக் மேட்ச்சின் கடைசி சுற்றுகள் நடக்கவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி இரவு 8.30 மணிக்கு, இந்திய அணி இந்த கடைசி லீக் மேட்ச்சில், பாகிஸ்தான் அணியினை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணியினர் நேரடியாக மோதவுள்ளதை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் காணவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த இறுதி லீக் ஆட்டம், இன்று இரவு 8 :30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.