Page Loader
பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு
பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 10, 2023
10:20 am

செய்தி முன்னோட்டம்

தற்போதைய பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைய மூன்றே நாட்களே இருந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரீஃபின் கோரிக்கையின் பேரில், பாகிஸ்தான் நாடளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார் அந்நாட்டுக் குடியரசுத் தலைவர். அதனைத் தொடர்ந்து, புதிய காபந்து அரசை ஷபாஷ் ஷெரீஃபும், அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வும் செய்யவிருக்கின்றனர். மேலும், அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையமானது, அந்நாட்டின் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டியிருப்பதால், தேர்தலானது அடுத்த ஆண்டு வரை தள்ளிப் போகலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் நிலை: 

ஏற்கனவே, அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் துவண்டிருக்கும் பாகிஸ்தானில், தேர்தல் தள்ளிப் போனால் பொதுமக்களின் கோபம் அதிகரித்து, நாட்டில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2018 நாடளுமன்றத் தேர்தலில் வென்று, பிரதமராகப் பதவியேற்ற பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது கடந்த ஆண்டு நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் பங்குபெற முடியாத சூழல் இருக்கிறது. இதனால் இம்ரான் கான் ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.