முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்; வைரலாகும் புகைப்படம்
ஆசிய கோப்பை 2023 நிகழ்வின் போது முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற உள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கிரிக்கெட் கோப்பையை ஹைபிரிட் முறையில் இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்த உள்ளது. முன்னதாக, போட்டியை பாகிஸ்தான் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பிசிசிஐ இந்திய அணியை அங்கு அனுப்ப மறுத்ததால், தற்போது போட்டி ஹைபிரிட் முறையில் நடக்க உள்ளது. இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் மட்டுமே நடக்க உள்ளது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி தயங்கியனாலும், போட்டியை நடத்தும் நாடு என்பதால், பாகிஸ்தானின் பெயர் இந்திய ஜெர்சியில் இடம் பெறுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.