வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல்
பிரதமரின் ஜன் யோஜனா திட்டம் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு திட்டங்களில் மட்டுமே, எவ்வித வைப்புத்தொகையினையும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையாம். இதனை தவிர்த்து மற்ற அனைத்து வங்கி கணக்குகளுக்குமே அந்தந்த வங்கிகளுக்கு ஏற்றவாறு வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்னும் விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதனை கணக்கில் வைத்திருக்காத பட்சத்தில், அதற்கான அபராதத்தினை வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து வசூல் செய்துவிடும். அதன்படி, வங்கி கணக்கில் மினிமன் பேலன்ஸ் என்னும் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைக்காததன் அபராதமாக ரூ.21,000 கோடி வசூல் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் ஏடிஎம் பயன்பாட்டில் ரூ.8,289 கோடியும், எஸ்.எம்.எஸ்.சேவை தொகைக்காக ரூ.6,254 கோடியும் வசூலாகியுள்ளது என்று அறிக்கை வெளியாகியுள்ளது.