14 Sep 2024

அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஜனநாயகத்தின் ஜோதி; நடிகர் விஜயின் கடைசி படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பற்றிய முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்டனர்.

கொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம்

சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 1.45 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள ப்ளாச்மேன் தெரு மற்றும் எஸ்என் பானர்ஜி சாலை சந்திப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயதான குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

72% வளர்ச்சி; இந்திய வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோ எஸ்யூவி

கார் விற்பனையில் ஒட்டுமொத்த மந்தநிலை இருந்தபோதிலும், இந்தியாவின் வாகனச் சந்தை மைக்ரோ எஸ்யூவிகளை நோக்கி கணிசமான மாற்றத்தைக் கண்டு வருகிறது.

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை; திங்கட்கிழமை (செப்.16) தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ சேவையை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தனது இரண்டு நாள் பயணத்தின் போது தொடங்கி வைக்க உள்ளார்.

அதிபர் தேர்தலில் வாக்களிப்பு; விண்வெளியில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் ஓணம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கேரள மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்; ஆர்பிஐ அதிரடி உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் ஆர்பிஐ உத்தரவுகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது.

விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்

ஈரான் தனது துணை ராணுவப் புரட்சிப் படையால் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024இல் இந்திய ஹாக்கி அணி தனது ஐந்தாவது குரூப் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

அமரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு; படக்குழு அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவருவதில் படக்குழு தீவிரமாக உள்ளது.

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் எனத் தகவல்; உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா?

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் எம்எஸ் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார்.

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பயணம் வெற்றி; ரூ.7,600 கோடி முதலீட்டுடன் தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) சென்னை வந்தடைந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகல்? இந்திய வீரர் டி நடராஜன் வெளியிட்ட முக்கிய தகவல்

2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்றுத் தொடர் வெற்றியில் முக்கிய வீரரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் டி நடராஜன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.

13 Sep 2024

கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

உலக சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்காவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை MVA-BN என்ற பெயரில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு; பின்னணி என்ன?

இந்திய விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மற்றும் நாட்டின் வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆணை பிறப்பித்ததை அடுத்து திகார் சிறையில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) விடுவிக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட IC421 விமானத்தில் எனது தந்தை இருந்தார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி தகவல்!

ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக 1984ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 421 இல் தனது தந்தை இருந்ததை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.

ஒன்பது நாட்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து கேட்ட மர்ம சத்தம்; பின்னணியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

செப்டம்பர் 2023இல், உலகம் முழுவதும் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் ஒரு மர்மமான சமிக்ஞையை கண்டுபிடித்தனர்.

தனக்கு தானே திருமணம்..தனக்கு தானே விவாகரத்து:லண்டன் பெண்ணின் வினோத செயல்

36 வயதான பிரேசிலிய மாடலான Suellen Carey என்ற பெண்மணி ஒரு வருட சுய திருமணத்திற்குப் பிறகு தன்னை தானே விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்தார்.

தளபதி 69: 'One Last Time' என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்குமென நம்பப்படும் 'தளபதி 69' குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், அது உறுதி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பினை இன்று மாலை 5 மணிக்கு KVN தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதில் தாமதம்; பிசிசிஐயின் திட்டம் என்ன?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தக்கவைப்பு விதிகளை வெளியிடுவதை ஒத்திவைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சூப்பர் அப்டேட்; இனி வாட்ஸ்அப்பிலும் இன்ஸ்டாகிராம் போல் ஸ்டேட்டஸ் லைக் செய்யலாம்

மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜ் செயலியான வாட்ஸ்அப்பில் இன்ஸ்டாகிராம் போல ஸ்டேட்டஸ்களுக்கு லைக் போடும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்: மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை

மணிப்பூர் அரசு ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பிராட்பேண்ட் இணைய சேவைகளுக்கான தடையை நிபந்தனை அடிப்படையில் நீக்கியது.

இந்திய கடற்படையுடன் இணைந்து VLSRSAM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ

ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சில் இருந்து தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக செங்குத்தாக ஏவக்கூடிய குறுகிய தூர மேற்பரப்பு ஏவுகணையை (VLSRSAM) இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) வெற்றிகரமாக பரிசோதித்தது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.

இனி ரயில் பயணங்களிலும் கூட நீங்கள் சோமாட்டோவில் ஆர்டர் செய்யலாம்!

இந்தியாவின் முன்னணி உணவு விநியோக தளமான சோமாட்டோ (Zomato), தனது விநியோக சேவையில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை செய்துள்ளது.

மிஷன் மௌசம்: இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்

இந்திய அரசாங்கம் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் மற்றும் அதற்கு தயாராகும் நாட்டின் திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன், 'மிஷன் மௌசம்' என்ற லட்சிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

ரூ.9 கோடி ஃபெராரியைத் தொடர்ந்து ரூ.4 கோடி போர்ஸ்சே கார்; நடிகர் அஜித்தின் புதிய அப்டேட்

பைக்குகள் மற்றும் கார்கள் மீதான தனது பேரார்வத்திற்காக புகழ்பெற்ற நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ₹4 கோடி மதிப்புள்ள போர்ஸ்சே ஜிடி3 ஆர்எஸ்ஸை (Porsche GT3 RS) வாங்கியுள்ளார்.

ஒசாமாவின் மகன் ஹம்சா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவருடைய திட்டம் இதுதான்: நிபுணர்கள்

2019இல் இறந்ததாக நம்பப்படும் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் புதிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ கசிந்து சர்ச்சை; வெளிப்படையாக மன்னிப்பு கோரினார் அண்ணாமலை

ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆம்னி பேருந்து கட்டணம் இருமடங்கு உயர்வு; விடுமுறைக்கு ஊருக்கு செல்ல காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி

வார இறுதி நாட்கள், முகூர்த்த தினம், ஓணம் மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல நினைத்த பயணிகளுக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது.

அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் கூண்டோடு ராஜினாமா

அமெரிக்காவின் முக்கிய வீடியோ கேம் வெளியீட்டாளரான அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தில் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் பெருமளவில் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரி செலுத்தியதில் முறைகேடு; டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலருக்கும் வருமான வரித்துறையிடமிருந்து வரிக் குறைப்புக் கோரிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

வரலாற்றில் முதல் முறை; சமூக வலைதளங்களில் 1 பில்லியன் ஃபாலோயர்கள் பெற்று ரொனால்டோ சாதனை

பிரபல போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு: கார் உற்பத்தியை தொடங்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது.

விஜய் ரசிகர்களே! 'தளபதி 69' பற்றி மாலை 5 மணிக்கு வெளியாகிறது அறிவிப்பு

நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என நம்பப்படும் 'தளபதி 69' குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கம்

கடந்த 2022ஆம் ஆண்டு, நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானது முதல் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தமிழக மீனவர்கள் இன்று (செப்டம்பர் 13) முதல் மூன்று நாட்களுக்கு மோசமான வானிலை காரணமான குறிப்பிட்ட சில கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்கால IT செயலிழப்புகளைத் தடுக்க Windows பாதுகாப்பை பலப்படுத்துகிறது மைக்ரோசாப்ட் 

CrowdStrike, Sophos, Broadcom மற்றும் Trend Micro போன்ற பாதுகாப்பு விற்பனையாளர்கள் Windows கர்னலுக்கு வெளியே செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு, மைக்ரோசாப்ட் தனது Windows இயங்குதளத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிபந்தனைகள் என்ன?

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு மைக்ரோசாப்ட் 365 சேவைகள் முடக்கம்

செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான Downdetector.com கூற்றின்படி, மைக்ரோசாப்டின் productivity software-இன் தொகுப்பு வியாழக்கிழமை 16,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு முடங்கியது.

சென்னை தாம்பரம்- ராமநாதபுரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியது.

91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; இப்படியொரு சாதனையா!

கிரேட்டர் நொய்டாவில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 13) வரை ஆப்கான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே திட்டமிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

அதானியின் வங்கி கணக்குகளை முடக்கியது சுவிட்சர்லாந்து: ஹிண்டன்பர்க் அறிக்கை

சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அதானி குழுமத்தின் மீதான விசாரணையில் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளில், $310 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.

17 நாட்கள் பயணம்..18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.

நடிகை தீபிகா படுகோனையும், குழந்தையையும் நேரில் சந்தித்து வாழ்த்திய ஷாருக்கான்

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தன்னுடைய சக நடிகையான தீபிகா படுகோனையும், அவரது குழந்தையும் நேற்று இரவு மருத்துவமனையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கவுள்ளது.

மணலி துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து..இருளில் மூழ்கிய சென்னை

சென்னையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது.