2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார். 60 வயதான மிஷன்: இம்பாசிபிள் நட்சத்திர நடிகர், ஸ்டேட் டு பிரான்ஸில் இருந்து குதித்து, மைதானத்திற்குள் இறங்கி, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் மற்றும் சிமோன் பைல்ஸ் ஆகியோரிடமிருந்து அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் கொடியை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பாரிஸ் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஹாலிவுட் அடையாளத்தின் பின்னால் உள்ள மலைகளில் ஸ்கை டைவ் செய்தார். ஆனால் அவர் அதையெல்லாம் செய்வதற்கு அவருக்கு தரப்பட்ட சம்பளம் எவ்வளவு?
'டாம் குரூஸ் அனைத்தையும் இலவசமாகச் செய்தார்...'
LA28 இன் தலைவர் கேசி வாசர்மேன், டாம் குரூஸ் இந்த ஸ்டண்ட்-ஐ சம்பளம் ஏதும் பெறாமல் இலவசமாக நிகழ்த்தியதை சமீபத்தில் வெளிப்படுத்தினார். "நிகழ்ச்சியின் சிறந்த பகுதி என்னவென்றால், நாங்கள் ஜூம் மூலமாக நடத்த திட்டமிட்டோம். மேலும் ஸ்டண்ட் டபுளாக ஸ்டேடியத்தில் வேறொரு நபரை இறக்கலாம் என யோசித்திருந்தோம்" என்று வாஸ்மேன் கூறினார். "நிகழ்ச்சியில் [டாம் குரூஸ்] ஏறக்குறைய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, 'நான் உள்ளே இருக்கிறேன். ஆனால் நான் எல்லாவற்றையும் செய்யவதாக இருந்தால் மட்டுமே நுழைவேன்'." என்று தெரிவித்துள்ளார்.
டாம் க்ரூஸின் பிஸியான அட்டவணை
டாம் குரூஸ் ஸ்டண்டிற்காக பின்பற்ற வேண்டிய பரபரப்பான அட்டவணையையும் வாஸ்மேன் விவரித்தார். "அவர் லண்டனில் மிஷன்: இம்பாசிபிள் படப்பிடிப்பை முடித்தார். உடனே, ஒரு விமானத்தில் ஏறினார். அவர் LA இல் தரையிறங்கினார் மற்றும் அவர் ஒரு இராணுவ விமானத்தில் இறங்கும் காட்சியைப் படமாக்கினார்." "LA இல், அவர் இரண்டு முறை ஜம்ப் செய்து பார்த்தார். அவருக்கு முதல் ஜம்ப் பிடிக்கவில்லை, எனவே அவர் இரண்டாவது ஜம்ப் செய்தார். பின்னர் அவர் பாம்டேலில் இருந்து ஹாலிவுட் அடையாளத்திற்கு ஹெலிகாப்டரில்... பர்பாங்க் விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று மீண்டும் லண்டனுக்கு பறந்தார்" என்றார்.