
மணலி துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து..இருளில் மூழ்கிய சென்னை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது.
சென்னை மணலி துணை மின்நிலையத்தில் உள்ள முக்கிய யூனிட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் மின்தடை ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.15 மணியளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மணலி, மின்ட் சாலை, வேளச்சேரி, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கொளத்தூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், மதுரவாயல், புரசைவாக்கம், மந்தைவெளி, தி. நகர், பெரம்பூர் மற்றும் சென்னையின் பிற பகுதிகள் மின்தடையால் பாதிக்கப்பட்டன.
இதோடு, சூளைமேடு, மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னையின் சில பகுதிகளும், கோட்டூர்புரம், ராயபுரம், திருவான்மியூர் உள்ளிட்ட தென்சென்னையின் சில பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இருளில் மூழ்கிய சென்னை
தீ விபத்து - இருளில் முழுகிய சென்னை#PowerCut | #Chennai | #Manali | #TNEB pic.twitter.com/JiAHkQLYgq
— விகடன் (@vikatan) September 12, 2024