NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்
    நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு

    நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 13, 2024
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது.

    இதில் தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் மொத்தம் 7,93,986 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர்.

    இந்நிலையில், இந்த தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள் 20.06.2024-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி-2 & 2 ஏ பணிகள்) அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (ஓஎம்ஆர் முறை) முதனிலைத் தேர்வு 14.09.2024 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

    கண்காணிப்பு

    தேர்வை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் குழுக்கள்

    இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள்.

    தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    மொத்தமுள்ள 2,763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோகிராப் செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வசதிகள்

    தேர்வெழுத செல்பவர்களுக்கான வசதிகள்

    விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து மையத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று, அதாவது 14.09.2024 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அனுமதி

    9 மணிக்கு மேல் அனுமதி கிடையாது

    9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    டிஎன்பிஎஸ்சியின் எக்ஸ் பதிவு

    pic.twitter.com/N35EvVpdBT

    — TNPSC (@TNPSC_Office) September 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிஎன்பிஎஸ்சி
    தேர்வு
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டிஎன்பிஎஸ்சி

    ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல் தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு தேர்வு
    டிஎன்பிஎஸ் சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது; எப்படி பதிவிறக்கம் செய்வது? இந்தியா
    டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு தேர்வு

    தேர்வு

    கேரளாவில் பியூன் வேலைக்கு குவிந்த BE, Btech பட்டதாரிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்  கல்வி
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  பள்ளிக்கல்வித்துறை
    தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழை
    கர்நாடகா: தேர்வுகளின் போது ஹிஜாப் போன்ற முக்காடுகள் அணியத் தடை கர்நாடகா

    தமிழகம்

    தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன் தமிழ்நாடு
    வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம் தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் தமிழக அரசு

    தமிழ்நாடு

    'அவர் என்னோட நண்பர்': அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் ரஜினிகாந்த்
    ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்
    தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன் தமிழகம்
    353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு அண்ணா பல்கலைக்கழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025