17 நாட்கள் பயணம்..18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். 17 நாட்கள் நீடித்த அவரது சுற்றுப்பயணத்தில், பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, தமிழகத்தில் தொழில் துவங்க பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதுவரை, 18 நிறுவனங்கள் உடன் 7,616 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. பயணத்தில் கடைசி நாளான இன்று அதிகாலையில் கூட சிகாகோவில் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் ஓசூரில் தனது கிளையை திறக்க முடிவு செய்திருக்கிறது. இதனையடுத்து தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்.