ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட வாரத்தில் இரு முறை இயக்கப்படும் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரெயில் இந்த மாதமும் அதன் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் கூடுதலாக மேலும் 3 ஸ்பெஷல் ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு சென்றடையும். மறுமார்கமாக மங்களூரில் இருந்து (செப்டம்பர் 15-ஆம் தேதி) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ஸ்பெஷல் ட்ரெயின்
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06160) நாளை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். எனினும் இந்த ட்ரெயின் மறுமார்கமாக இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06163) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கண்ணூா் சென்றடையும். மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கட்கிழமை (16-ந்தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.